Saturday, May 18, 2013
கூட்டு ஒப்பந்தத்திற்கு தயக்கம் காட்டினால் பாரிய விளைவு ஏற்படும்: வேலாயுதம்
தோட்ட சேவையாளர்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் தொடர்பில் 'இணக்கப்பாட்டுச்சபை" மூலமாகவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்விடயம் பெருந்தோட்ட தொழிற்சங்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு எவ்வகையிலும் பாதகங்களை ஏற்படுத்தாது.
இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாணசபை உறுப்பினருமான க.வேலாயுதம் பதுளையியுள்ள சங்கப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் க.வேலாயுதம் தொடர்ந்து கூறுகையில்,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் மேம்பாடுகள் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒவ்வொரு இருவருடங்களுக்கு ஒரு முறையும் கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படுகிறது.
அதன்படி அடுத்த மாதத்தின் 31 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெற்று புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாமும் இ.தொ.கா.வும் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பும் ஆரம்பித்துள்ளோம்.
இப்பேச்சுவார்த்தையின் பின்னர் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனும் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளை கைச்சாத்திட ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.
இந்நிலையில் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தயக்கம் காட்டினால் பாரிய எதிர்விளைவுகளை எதிர்கொண்டேயாக வேண்டும்.
அத்துடன் ஏற்படும் பாதிப்புகளுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பதில் கூறியேயாக வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவு உயர்வு உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வு தோட்டத் தொழில்துறை அபிவிருத்தி ஆகியவற்றின் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் காலம் செலுத்தியேயாக வேண்டும் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment